--- --:--:-- --

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

9

மிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் திறக்கப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon