பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரம் செல்ல தடை..!
ஜி 20 மாநாடு நடைபெற உள்ளதால் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி ஒன்றாம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி-20 மாநாடு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரேலிய, பிரேசில், கனடா நாடுகளில் இருந்த பிரதிநிதிகள் வர உள்ளனர்.
இந்த நிலையில் டி20 மாநாடு காரணமாக பாதுகாப்பு நலன் கருதி வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





