இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நடிகை சோனியா அகர்வால்..!
தமிழில் காதல் கொண்டேன், கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர் செல்வராகவனை 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து விலகி இருந்தார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
தற்போது ஒரு பேட்டியில் சோனியா அகர்வால் தனது மறுமணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், எவ்வளவு நாளைக்கு தனியாக இருக்க முடியும் என தெரியாது, எனக்கு பிடித்தமான நபரை பார்க்கும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




