--- --:--:-- --

பூஜை அறையில் புதையல் இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ. 1 லட்சம் பணம் பறிப்பு..!

4

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புதையல் எடுத்து தருவதாக கூறி கூலி தொழிலாளி பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் பறித்த போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

 

புழுதி குட்டை கிராமத்தை சேர்ந்த பழனியம்மாளின் வீட்டிற்கு வந்த நாமக்கல்லை சேர்ந்த செல்வராஜ் என்ற ஜோதிடர் பூஜை அறையில் புதையல் இருப்பதாகவும் சிறப்பு பூஜை செய்து புதையலை எடுத்துக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

 

இதையடுத்து பழனியம்மாள் வீட்டிலிருந்து நகைகளை அடமானம் வைத்து ஜோதிடர் செல்வராஜ் கேட்ட ஒரு லட்சம் ரூபாயை அவரது கூகுள் பே எண்ணுக்கு அனுப்பியுள்ளார். ஒரு வாரம் கழித்து வருவதாக கூறிவிட்டு வராததால் இது குறித்து கணவரிடம் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் செல்வராஜை கண்டுபிடித்து கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon