--- --:--:-- --

பொங்கலுக்கு பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க சிஐடியு கோரிக்கை..!

4

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிஐடியூ தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூரில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்வது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தொழிலாளர் விடுதி ஆணையர் அலுவலகம் முன்பாக கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

அப்பொழுது கடந்த ஆட்சியைப் போல கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க கோரிக்கை விடுத்தனர். பழனியில் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகைக்கு தரமான வேஷ்டி, சேலை வழங்க அறிவுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதைப்போல இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர், தங்களது நல வாரியத்தில் தொழிலாளர்களின் அச்சமூட்டும் வகையில் நடைபெறும் ஆய்வுகளை நிறுத்த வலியுறுத்தி போராட்டம் செய்தனர்.

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பொங்கல் பண்டிகைக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon