--- --:--:-- --

டயரில் சிக்கிய பெண்ணை சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற கார்..!

4

டெல்லியில் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் விபத்தில் சிக்கிய பெண்ணை சாலையில் பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதில் அவர் உயிரிழந்தார்.

 

டெல்லியில் கஞ்ச் கபாரா பகுதியில் பெண் ஒருவர் காரின் அடியில் சிக்கி இழுத்து செல்லப்படுவதாக போலீசருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து காரின் பதிவு எண்ணை வைத்து தேர்தல் வேட்டை நடத்திய போலீசார் தகவலின் பேரில் நிர்வாணமாக கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

 

அதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது கார் மோதி அவரை பல கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்றதில் அவர் பலியானது தெரியவந்தது. விபத்து தொடர்பாக ஐந்து பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon