--- --:--:-- --

மத்திய அரசின் இலவச உணவு தானிய திட்டம் இன்று முதல் அமல்..!

5

மத்திய அரசின் இலவச உணவு தானிய திட்டம் இன்று முதல் அமலாகிறது. இதன் மூலம் சுமார் 81கோடி மக்கள் பயன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா காலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் படி ஏழை குடும்பத்தினர் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேசனில் ஐந்து கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

 

இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டம் மேலும் ஓர் ஆண்டுக்கு நடத்தப்படும். அதன்படி அரசி, கோதுமை தானியங்கள், தகுதியான பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

 

இந்த திட்டம் டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வரும் சூழலில் சுமார் 81.35 கோடி மக்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon