குண்டு வெடிப்பில் குழந்தைகள் உயிரிழப்பு..!
ஜம்மு காஷ்மரின் ராஜாரி பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை உயிரிழந்தது, 5 பேர் காயவடைந்தனர். பயங்கரவாதிகள் நேற்று துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இதனால் ஜம்மு காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு தங்களை பாதுகாக்க தவறியதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் துப்பாக்கி சூடு நடந்த வீட்டின் அருகே குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பில் ஒரு குழந்தை உயிரிழந்தது.
ஐந்து பேர் காயமடைந்தனர். அந்த பகுதியை கட்டுக்குள் கொண்டு வந்த பாதுகாப்பு படையினர் தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளனர். ஒரு இடத்தில் வெடிகுண்டு கண்டறியப்பட்டு அகற்றப்பட்டதாக பாதுகாத்துள்ளனர். இதற்கிடையே இந்த வாரத்தில் தேசிய புலனாய்வு விசாரிக்க உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





