--- --:--:-- --

மேலே பறக்காமல் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த ஹெலிகாப்டர்..!

7

நாள்தோறும் சமூக வலைதளங்களில் பல விஷயங்கள் நம்மை சிந்திக்கவும், சிரிக்க வைக்கவும் செய்கிறது. தற்பொழுது நெஞ்சை பதை பதைக்க வைக்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் விமானி ஒருவர் சிறிய ரக ஹெலிகாப்டரைமேலே எழுப்புகிறார்.

 

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து காற்றில் ஆட துவங்கியது. இதையடுத்து ஒரு பெண்மணி உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்து ஹெலிகாப்டரை கீழே இறக்குமாறு கூச்சலிடுகிறார். ஆனால் திடீரென்று அந்த ஹெலிகாப்டர் வலது புறமாக சாய்ந்து.

 

அதில் இறக்கைகள் வேகமாக தரையில் அடித்து சிதறி ஹெலிகாப்டர் தலைகீழாக கவிழ்ந்து விடுகிறது. விமானிக்கும் அங்கிருந்த பெண்மணிக்கும் எதுவும் ஆகவில்லை. இதையடுத்து தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை திகைக்க செய்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon