--- --:--:-- --

சிபிஐ அதிகாரி எனக் கூறி பெண்ணிடம் பணம் மற்றும் நகை மோசடி..!

8

ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிபிஐ அதிகாரி எனக் கூறிக்கொண்டு பெண்ணிடம் பணம், நகை பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தேவி என்பவருக்கு சிபிஐ அதிகாரியான அறிமுகமான நபர் பலருக்கும் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

 

இதுபோல அந்த பெண்ணிடமும் வேலை வாங்கித் தருவதாக கூறி அறுபதாயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். மேலும் மூன்று சவரன் நகையை வாங்கியுள்ளார். பின்னர் ஏமாற்றப்பட்டதை தேவி உணர்ந்து அந்த பெண் கொடுத்த புகாரில் வேலூரை சேர்ந்த குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon