முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்..!
தேர்தல் பரப்பரையின் பொழுது வட்டாட்சியர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர அழகிரி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அழகிரி உட்பட 21 பேர் மீது 100 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அழகிரி உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
சட்டப்பேரவை தேர்தலின் பொழுது வேலூர் அருகே உள்ள அம்பலக்காரன்பட்டி கோவிலுக்குள் அழகிரி கிராமத்தினருடன் ஆலோசனை நடத்தினார்.
பணபட்டு வாடா செய்யப்படுவதாக அதிமுகவினர் புகார் அளித்த நிலையில் அங்கு தேர்தல் அதிகாரிகள், வட்டாட்சியருமான காளிமுத்து ஒளிப்பதிவாளர் உடன் சென்றார். அப்பொழுது அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்ததாக கீழவளவர்க்க காவல் நிலையத்தில் காளிமுத்து புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர அழகிரி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





