--- --:--:-- --

மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை தாக்கிய இருவர் கைது..!

11

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரை தாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். பி.எஸ்.ஆர் சாலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்ஜெயபாலை இருவர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி பாண்டியராஜன் மற்றும் கருப்பசாமி சகோதரர்களை கைது செய்தனர். தங்கள் தாய் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த நிலையில் மருத்துவர்.

 

அலட்சியமே காரணம் எனக் குற்றம் சாட்டி இந்த தாக்குதலை நடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon