--- --:--:-- --

மாணவனை துடிக்க துடிக்க அடித்த ஆசிரியை..!

18

பள்ளி மாணவனை ஆசிரியை தாக்கிய விவகாரத்தில் ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சிதம்பரம் அருகே கூடுவல்லி சாவடி கிராமத்தில் அரசு தொடக்கநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

 

இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை பள்ளியின் ஆசிரியை கண்ணகி என்பவர் சரமாரியாக அடிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

 

இது குறித்து செய்தி வெளியான நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் சில தினங்களில் சம்பவம் சார்ந்த நடத்தப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon