--- --:--:-- --

மாவட்ட பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கண்காணிப்பாளர் பிரேமலதா 202 பேருக்கு உதவித்தொகையை வழங்கினார்..!

7.1

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

 

மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவின்பேரில் நடந்த விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை தாங்கினார். மாவட்ட பிறப்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரவிசந்திரன், ஐக்கிய ஜமாஅத் தலைவரும், முஸ்லீம் கல்வி உதவும் அறக்கட்டளை தலைவருமான ஜக்கரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

விழாவில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாவை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், மற்றும் சிறுபான்மையினரான விதவைகள், முதியோர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், சிறு தொழில் முனைவோர், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என 202 பேருக்கு மாவட்ட பிறப்படுத்தப்பட்டோர் நல கண்காணிப்பாளர் பிரேமலதா ரூ. 12 லட்சத்து 2 ஆயிரத்து 320 மதிப்புள்ள காசோலைகளை வழங்கினார். இத்துடன் 2 பெண்களுக்கு தையல் மிஷினும் வழங்கப்பட்டது.

 

விழாவில் முஸ்லீம் கல்வி உதவும் அறக்கட்டளை செயலாளர் அலாவுதீன், ஆடிட்டர் மஜீத், உறுப்பினர் நிஜாத், மகளிர் சுயஉதவிக்குழு இணை செயலாளர்கள் பர்வீன் பேகம், மெஹ்ருன்நீசா, தாராபுரம் நபி வழி மன்ற நிர்வாகிகள் முஹம்மது இக்பால், காஜா நஜுமுதீன், சையத் ரியாஸ் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon