--- --:--:-- --

மார்பகம் வேண்டாம் எனக்கூறி அறுவை சிகிச்சை செய்த இளம் பெண்..!

6

உலகத்தில் பல்வேறு விதமான நோய்கள் இருக்கிறது. மேலும் சில நோய்கள், ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும். அதுபோல சில நோய்கள் பெண்களை மட்டுமே தாக்கும். எனவே பெண் ஒருவர் மார்பகமே வேண்டாம் என்று முடிவு செய்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

ஸ்டெப்னி ஜெர்மினோ என்ற பெண்மணி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் வசித்து வருகிறார். தனது 28 வது வயதில் மாஸ்டர் டோனி என்ற மார்பக அறுவை சிகிச்சையை தைரியமாக செய்து கொண்டார். அவருக்கு பிஆர்சிஏ1 என்ற மரபணு கோளாறு இருக்கிறது.

 

இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 90% இருப்பதாக சர்வதேச புற்று நோய் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இவரின் பாட்டியும் மார்பகப் புற்று நோயால் அவதிப்பட்டு இறந்துள்ளார்.

 

எனவே இந்த கொடிய நோயின் ஆபத்தை ஆய்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். இந்த பெண்மணி மார்பகம், பெண்மையின் அடையாளம் இல்லை என்றும் எனது மகனுக்கு ஆறு வயதாகிறது.

 

அவன் குழந்தையாக இருக்கும் பொழுது நான் தாய்ப்பால் ஊட்டி தாய்மையின் கடைமையை முடித்து விட்டேன் என்றார். இதனால் சிகிச்சை செய்து கொண்டேன். சமநிலையான நெஞ்சு பகுதியை கொண்ட பெண்ணாக இருப்பதில் எந்த மனக் கவலையும் இல்லை என்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon