--- --:--:-- --

விபத்தால் கோமாவுக்கு சென்ற இளைஞரின் உடல் தானம்..!

10

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் விபத்தில் சிக்கி கோமாவுக்கு சென்ற நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் விபத்தில் சிக்கி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

இந்த நிலையில் கார்த்தி கோமாவுக்கு சென்றதால் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அவரது இதயம், கண்கள், கணையம், நுரையீரல் கிட்னி உள்ளிட்ட உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.

 

இந்த உறுப்புகள் சென்னை, நெல்லை மதுரையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon