17 வயது மாணவி மீது ஆசிட் வீசிய விவகாரம்..!
டெல்லியில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசிய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான முன்னாள் காதலன் flipkart-ல் ஆசிட் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.
டெல்லியில் மோகன் கார்டன் பகுதியில் 17 வயது மாணவியின் மீது ஆசிட் வீசிய விவகாரத்தில் மூன்று பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் காதலன் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இருவரும் காதலித்து வந்ததாகவும் அந்த பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கொலை செய்ய திட்டம் தீட்டி ஆன்லைன் ஷாப்பிங் flipkart-இல் வாங்கி குற்றவாளி ஆசிட் வீசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மற்ற இரண்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன்பு மாணவி காதலை முடித்துக் கொண்டதால் மனமுடைந்த சச்சின் இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





