--- --:--:-- --

பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க கோரிக்கை..!

11

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் நீண்ட நாட்களாக பூட்டி இருக்கும் தாய்ப்பால் பாலூட்டும் அறையை பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

நாகப்பட்டினம் மாவட்டத்தை சுற்றி ஆன்மீக தலங்களும், சுற்றுலா தலங்களும் நிறைந்து காணப்படுகின்றன. வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

 

இந்த நிலையில் நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் நீண்ட நாட்களாக பூட்டி கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon