--- --:--:-- --

கதண்டு கடித்ததால் பள்ளி மாணவ, மாணவிகள் காயம்..!

11

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கதண்டு கடித்ததால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் சுமார் 25 பேரும், பொதுமக்கள் 15 பேரும் காமாட்சிபுரம் என்ற கிராமத்தில் இருந்து பந்தலூருக்கு நடந்து வந்தனர்.

 

அப்போது கிடங்கு அருகே இருந்த கதண்டு பூச்சிகள் நடந்து வந்தவரை கடித்ததால் அவர்கள் வழியில் துடித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon