உள்ளாடையில் கடத்தி வரப்பட்ட தங்கம்..!
துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 32 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் சுங்க இலாக்கா அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சென்னை சேர்ந்த இரண்டு பயணிகள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்பொழுது அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணித்த இரண்டு பேர் உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தியது தெரியவந்தது.
நான்கு பேரிடம் இருந்து ஒரு கோடியே 32 லட்சம் மதிப்புள்ள இரண்டு கிலோ 767 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நான்கு பேரையும் கைது செய்த சுங்க இலக்கா அதிகாரிகள் கடத்தலின் பின்னணி குறித்த விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





