இரண்டு குழந்தைக்கு தந்தையானவருக்கு 16 வயது சிறுமியுடன் காதல்..!
கன்னியாகுமரி அருகே 16 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 36 வயதான நபர் மீது இரண்டாவது முறையாக போக்சோ வழக்குப் பாய்ந்தது. சுசீந்திரத்தை சேர்ந்த 36 வயதான மார்க்கண்டேயனுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.
பின்னர் 2021 இல் சிறுமியுடன் தலைமறைவானவர் ஏற்கனவே போக்சோவில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் சிறுமியுடன் மாயமான நிலையில் அவர் ஓசூரில் அதே சிறுமியுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தது தெரிய வரவே, போலீசார் அவரை இரண்டாவது முறையாக போக்சோவில் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





