கர்நாடகாவில் முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு..!
கர்நாடகாவில் ஒரு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கேரளா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகாவில் முதன் முறையாக ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிகா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளான ஏடிஸ் வகை கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் பொழுது ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது.
டெங்கு மற்றும் சிக்கன் குனியா ஆகியவற்றை போல் பாதிப்புகளை உண்டாக்கும். பகல் நேரத்தில் தான் கொசுக்கள் மனிதர்களை கடிக்கும். அதாவது காலை மற்றும் பிற்பகல் அல்லது மாலை வேலைகளில் கொசுக்களின் பரவல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த வைரஸ் முதன் முதலில் உகாண்டா நாட்டில் 1947 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் பெரிய பாதிப்புகள் இல்லை என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது. ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களுடைய வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது .
📱 Share on WhatsApp 𝕏 Share on X





