--- --:--:-- --

ஆபாச படம் காண்பித்த ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்..!

7

முதல் இரவு என்றால் என்னவென்று பாடம் எடுப்பதாக கூறி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியருக்கு பெற்றோர்கள் தர்ம அடி கொடுத்தனர். கர்நாடகா மாநிலத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பிரகாஷ்.

 

இவர் இரண்டு நாட்களுக்கு முன் வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி இருக்கிறார். அப்பொழுது முதல் இரவு என்றால் என்னவென்று பள்ளி மாணவிகளிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

 

மேலும் தாம்பத்தியம் குறித்தும் விளக்கி பேசி இருக்கிறார். அது தொடர்பான ஆபாச படங்களையும் காட்டி பேசி இருக்கிறார். இதனை மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் பொது மக்களும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆசிரியரை பிடித்து அடித்து உதைத்துள்ளனர். புகாரின் பேரில் மாணவ, மாணவிகள் விசாரணை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள் அவரை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon