--- --:--:-- --

மக்களிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டை அரசு திரும்பப் பெறுமா?

15

2,000 ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெற வேண்டும் என்று பாஜக எம்.பி.சுசில் குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையில் அதிக நேரத்தின்பொழுது பேசியவர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பொழுது புழக்கத்தில் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்ற பிறகு 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதில் எந்தவித நியாயமும் இல்லை எனக் கூறினார்.

 

2,000 ரூபாய் நோட்டுகள் பணப் பதுக்கலுக்கும் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதால் அவற்றை அரசு படிப்படியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

மக்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளித்து வங்கிகள் மூலமாக அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சுசில் குமார் கோரிக்கை விடுத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon