ஆசிரியர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்..!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஆசியர் தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தங்களுக்கு மாநிலத்தில் பணியிடங்கள் நிரப்ப வில்லை எனவும், இதன் காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் சுமார் 3 மணி நேரமாக போராட்டமானது அமைதியாக முறையில் நீடித்தாக கூறப்படுகிறது. அதே சமயம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர்.
இதனிடையே போராட்டத்தினை கலைக்க போலீசார் முயன்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





