--- --:--:-- --

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி இன்று திறப்பு..!

1

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பது முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு இன்று நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன.

 

கடந்த ஜூன் மாதம் வன்முறையால் சூழப்பட்ட தனியார் பள்ளியை மறுசீரமைக்க அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட நிர்வாகம் நியமிக்கும் அலுவலகர்கள், காவல்துறையினர் கண்காணிப்பில் பணியை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதித்தது.

 

அதன்படி பணிகள் நிறைவடைந்ததையடுத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சரவணகுமார் தலைமை எதிரான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

 

அப்பொழுது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆட்சியர் முன்னிலையில் பள்ளியின் மூன்றாம் தளம் மற்றும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கணியமூர் பள்ளி 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு இன்று நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon