ரயில் பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள்..!

சென்னையில் இருந்து கோவை செல்லும் விரைவு ரயிலில் பயணி மீது டிக்கெட் பரிசோதகர் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் இன்டர்சிட்டி ரயிலில் பயணித்த பொழுது டிக்கெட் பரிசோதகருக்கும், பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

அப்பொழுது டிக்கெட் பரிசோதகர்கள் பயணியை தாக்கியுள்ளனர். அதில் காயமடைந்தவர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்நிலையில் டிக்கெட் பரிசோதர்கள் மீது அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.