பள்ளியில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என புகார்..!

ன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் கழிப்பறை கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தரக் கோரி பெற்றோருடன் மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பத்மநாபபுரம் பகுதியில் அமைந்திருக்கிறது கல்குளம் அரசு தொடக்கப்பள்ளி.

 

இந்த பள்ளியில் ப்ரீகேஜி முதல் ஆறாம் வகுப்பு வரை 21க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் வகுப்பறைகள் இல்லாததால் தற்காலிக சிமெண்ட் கூரை கொட்டகையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு கழிப்பறை வசதியும் இல்லாததால் மாணவர்கள் அவதி அடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பள்ளிக்கு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்வதாக கூறி பெற்றோருடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.