தந்தையை கொலை செய்து நாடகம் ஆடிய மகன்..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே குடும்பத்தகராறில் மகனால் கீழே தள்ளி விடப்பட்ட தந்தை உயிரிழந்தார். உசிலம்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் மதுபோதையில் மனைவி மற்றும் மகனுடன் தகராறில் ஈடுபட்டார்.

 

அப்பொழுது மகன் காளிதாஸ் தந்தையை தாக்கி கீழே தள்ள அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனிடையே அச்சமடைந்த மனைவியும், மகனும் கொலையை மறக்க முடிவு செய்தனர்.

 

தகவல் அறிந்த காவலர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இருவரும் கொலையை ஒப்புக்கொண்ட நிலையில் அவர்களை கைது செய்த காவலர்கள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.