திடீரென கிணற்றில் தவறி விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் பரபரப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ஒரே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தீயணைப்பு மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். ராமராஜன் நகர் பள்ளிக்கூடத்தில் வசித்து வருபவர் சந்திரசேகர்.

 

மனநிலை பாதிக்கப்பட்டவரான இவர் வீட்டின் அருகே உள்ள 25 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் ஒன்றரை மணி நேரம் போராடி சந்திரசேகரை உயிருடன் மீட்டனர்.