பாகுபலி நடிகர் பிரபாஸை டேட்டிங் செய்து வருகிறாரா பிரபல பாலிவுட் நடிகை..!

பிரம்மாண்ட பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் பெரியளவில் பிரபலமானவர் பிரபாஸ். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வெளியாவது வழக்கமாக இருக்கிறது.

 

அந்த வகையில் ராதே ஷயாம், சாஹோ உள்ளிட்ட திரைப்படங்கள் பிரம்மாண்ட படங்களாக வெளியாகியிருக்கிறது. அடுத்தும் சில பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

 

இந்நிலையில் பிரபாஸுடன் பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் டேட்டிங் செய்து வருவதாக வந்தந்திகள் பரவி வந்துள்ளது. இதற்கு தற்போது கீர்த்தி சனோன் அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதலளித்து இருக்கிறார்.

 

அதன்படி சமூக வலைதளங்களில் பரவி வரும் தனது டேட்டிங் குறித்த விஷயங்கள் அனைத்தும், வதந்திகள் என பதிவிட்டு இருக்கிறார்.