--- --:--:-- --

நீதிமன்றத்தில் மனைவியை பார்த்தது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த கணவன்..!

10

திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராக வந்த நபர் மனைவியை கண்டதும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த தியாகராஜன் என்பவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவரது மனைவி ஜீவனாம்சம் கேட்டு திருச்சி குடும்ப நலன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

 

இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த தியாகராஜன் தனது மனைவியை கண்டதும் மயங்கி விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon