வீட்டில் உள் பக்கமாக தாழிட்டு மாட்டிக் கொண்ட குழந்தை..!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வீட்டில் தனி அறையில் உள்ளிட்டு தாழிட்டு கொண்ட இரண்டு வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. முருகப்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.
இவரது இரண்டு வயது மகன் வீட்டிலுள்ள தனி அறையில் உள்பக்கத்தில் தாழிடப்பட்ட நிலையில் சிக்கிக் கொண்டான். தகவல் அறியும் தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தாழை உடைத்து அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





