--- --:--:-- --

மேடையில் பெல்லி டான்ஸ் ஆடிய ஸ்ரீதேவி மகள்..!

12

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் கைவசம் பல படங்கள் வைத்து இருக்கும் நிலையில் தற்போது மிலி என்ற படத்தின் ரிலீசுக்காக ப்ரோமோஷனில் ஈடுபட்டு வருகிறார்.

 

மலையாளத்தில் ஹெலன், தமிழில் அன்பிற்கினியாள் என்கிற பெயரில் வந்த கதை தான் ஹிந்தியில் ரிமேக் ஆகி இருக்கிறது. அந்த கதையில் ஹீரோயின் வேலை செய்யும் கடையில் இருக்கும் பிரீசர் ரூமில் சிக்கிக்கொள்வார்.

 

அவர் உயிர்பிழைக்க படும் கஷ்டங்கள் தான் படத்தில் காட்டப்பட்டு இருக்கும். இப்படி ஒரு கதையில் நடித்தது தனக்கு நிஜத்திலேயே மன அழுத்தத்தை கொடுத்தது என ஜான்வி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

 

இந்நிலையில் தற்போது ஜான்வி மிலி படத்தின் ப்ரோமோஷனுக்காக கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் Jhalak Dikhhla Jaa 10 ஷோவில் கலந்துகொண்டிருக்கிறார். அதில் அவர் மேடையில் பெல்லி டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon