--- --:--:-- --

சாலையோரத்தில் உள்ள மின்மாற்றி மீது பேருந்து மோதி விபத்து..!

3

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்து திரும்பிய பொழுது சாலையோரத்தில் உள்ள மின்மாற்றி மீது பேருந்து மோதி விபத்திற்கு உள்ளானது. பள்ளிப்பட்டியில் இருந்து 30 பயணிகளுடன் காஞ்சிபுரம் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.

 

எதிரில் வந்த இரு சக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க ஓட்டுனர் பேருந்தை மறுபுறம் திருப்பியபொழுது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்மாற்றியில் மோதியது. பராமரிப்பு பணி காரணமாக மின்மாற்றி செயலில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon