அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம்..!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17ஆம் தேதி கூட உள்ளது. இதனிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது. சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனைகள் நடைபெற உள்ளது.
சட்டப்பேரவையில் அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி பேச வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு உள்ளது தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





