மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்ததால் தந்தை தீக்குளிப்பு..!
சாதி சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்ததாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் அருகே தீக்குளித்த மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர் ஒருவர் தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரத்தில் அதிர்ச்சி அடைந்த அவர் சென்னை உயர் நீதிமன்றம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக மீட்டு காவலர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





