--- --:--:-- --

மின் கம்பம் உடைந்து விழுந்ததால் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி படுகாயம்..!

8

மதுராந்தகம் அருகே மின் கம்பம் உடைந்து விழுந்ததால் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பதினோரு வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.

 

மதுராந்தகம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரது 11 வயது மகள் தீபிகா வீட்டிற்கு எதிரே விளையாடிக் கொண்டிருந்த பொழுது அங்கிருந்த மின் கம்பம் ஒன்று திடீரென உடைந்து சிறுமி மீது விழுந்தது.

 

கையில் பலத்த காயம் அடைந்த சிறுமி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon