--- --:--:-- --

முதலையிடம் சிக்கிய ஆமையின் வீடியோவைரல்..!

9

விலங்குகள் வேட்டை ஆடிய பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் முதலையிடம் சிக்கிய ஆமையின் வீடியோ ஒன்று பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம் அந்த ஆமையை முதலை தன் வாயில் வைத்து கடிக்க முயற்சிக்கிறது.

 

ஆனால் உறுதியாக இருந்ததால் கடித்து உடைக்க முடியவில்லை. அதனால் அளவில் பெரிதாக இருந்தாலும் முதலையால் விழுங்க முடியவில்லை. சற்று நேரத்தில் முதலையின் வாயிலிருந்து வெளியே வந்தது ஆமை.

 

வேறு வழியில்லாமல் முதலை ஏமாற்றத்தை ஏற்றுக் கொண்டது போல் தெரிகிறது. இறுதியாக அந்த ஆற்றை நோக்கி சென்று கொண்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon