மதுவில் போதை மாத்திரையை கலந்து விற்பனை செய்த நபர் கைது..!
மதுவில் போதை மாத்திரையை கலந்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். ராமேஸ்வரத்தை அடுத்த கரையோரப் பகுதியை சேர்ந்த குமரகுரு என்பவர் டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கி அதில் போதை மாத்திரையை கலந்து விற்பனை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் குமரகுருவையும் கையும் களவுமாக பிடித்தனர். அப்பொழுது அவரிடம் இருந்த 50 மதுபாட்டில்கள் ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





