--- --:--:-- --

கடித்த பாம்பை உயிருடன் பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைத்த பெண்..!

4

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தன்னைக் கடித்த பாம்பை உயிருடன் பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைத்து பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

முள்ளுக்குறிச்சி பகுதியில் கூலி வேலை செய்து வந்த பெண்ணை கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அவருடன் வேலை செய்த நபர்கள் அந்த பாம்பை பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பாம்புடன் அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon