கர்ப்பமாக இருப்பதாக பொய் கூறிய மருத்துவமனை..!
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது கணவர் கடந்த ஜனவரி மாதம் காக்கி நாடாவில் உள்ள ரம்யா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளார். பரிசோதனையின் முடிவில் அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மகாலட்சுமி அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து வந்துள்ளார். இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து வந்துள்ளார். மகாலட்சுமிக்கு செப்டம்பர் மாதத்தில் பிரசவம் இருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து மகாலட்சுமி அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது மகாலட்சுமியின் கர்ப்பமாக இல்லை என்று அரசு மருத்துவர்கள் கூறியுள்ளதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஏற்கனவே பரிசோதனை செய்த மருத்துவமனையில் பித்தலாட்டத்தை உறுதி செய்துள்ளனர்.
குழந்தை ஆரோக்கியமாக இருக்க குழந்தை வளர்ச்சிக்கு மாதந்தோறும் அந்த மருத்துவமனையில் மருந்துகளை எழுதிக் கொடுத்துள்ளனர். அதை பயன்படுத்திய பின் எனது மகளின் வயிறு பெரிதாகி விட்டதாகவும் மகாலட்சுமியின் தாய் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





