--- --:--:-- --

பள்ளிகளில் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை..!

3

மிழகத்தில் RSS பேரணிக்கு பள்ளிகளில் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பசுமை தமிழகம் இயக்கம் தொடக்க விழா மற்றும் அறக்கட்டளை விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மியான்மரில் சிக்கியுள்ள கும்பகோணத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட தமிழர்கள் நீக்கப்படுவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் பள்ளிகளை பொறுத்தவரை ஆர்எஸ்எஸ் பயிற்சி பேரணிக்கு பள்ளிகளில் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon