நிலநடுக்கத்தால் காணாமல்போன இளைஞர் 17 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு..!

சீனாவில் நிலநடுக்கத்தால் காணாமல்போன இளைஞர் 17 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் மாகாணத்தில் கடந்த ஐந்தாம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி அதே பகுதியை சேர்ந்த 28 வயதான ஒரு ஊழியர்மாயமானார்.

 

தன் கண்களில் பாதிப்பு இருப்பதால் தன் கண்ணாடியை இழந்துவிட்டதால் வழி தெரியாமல் காட்டுப்பகுதியில் இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் மரக்கடையில் காயங்கள் இருந்ததை கண்டுபிடித்தார்.

 

பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து பேசிய அவர் 17 நாட்களாக காட்டுப்பகுதியில் பழங்களையும், தண்ணீரையும் பருகிக் கொண்டு வந்ததாக கூறினார்.