நடு விமானத்தில் விமான பணியாளரை தாக்கிய பயணி..!

மெக்சிகோவில் அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் விமான பணியாளரை தாக்கிய பயணியை போலீசார் கைது செய்தனர். கடந்த புதன்கிழமை கிளாஸ்கோ நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்ட விமானத்தில் பயணித்த 33 வயதான நபர் விமான பணியாளரிடம் தனக்குக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

 

அதோடு அவர் இருக்கையிலிருந்து எழுந்து முதல் வகுப்பு காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து உள்ளார். மீண்டும் அவரது இருக்கைக்கு போக சென்ற விமான பணியாளர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது பின் மண்டையில் தாக்கியுள்ளார்.

 

இந்நிலையில் விமானம் தரையிறங்கியதும் அந்த நபரை போலீஸார் கைது செய்த நிலையில் வாழ்நாள் முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்சில் பயணிக்க தடை விதிக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.