கிணற்றில் விழுந்த பசுமாட்டை மீட்கச் சென்ற போது சீரிய பாம்பு..!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டை மீட்கச் சென்ற தீயணைப்பு துறையினர் கருநாகத்தின் சீரலையும் சந்திக்க நேர்ந்தது. பிள்ளையார் கோவில் அருகே மேய்ந்து கொண்டிருந்த மாடு விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

 

தகவலறிந்த போடிநாயக்கனூர் தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கினர். அப்போது கிணற்றின் சுவரில் இருந்த கருநாகம் சீறியது. அப்போது கிணற்றின் சுவரில் சீறிக் கொண்டிருந்த கருநாகம் அச்சுறுத்தியது. இதையடுத்து முதலில் கருநாகத்தை லாவகமாக பிடித்து வெளியேற்றிய பிறகு திரையின் மூலம் பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.