--- --:--:-- --

தலைமை ஆசிரியரை பழிவாங்கும் நோக்கில் தமிழ் ஆசிரியர் கைது..!

1

கிருஷ்ணகிரி தலைமை ஆசிரியரை பழிவாங்கும் நோக்கத்தில் பள்ளி மாணவர்களை கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்து வீடியோ பதிவிட்ட தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

 

அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலகம் சென்று விசாரணை மேற்கொண்டார். தமிழாசிரியர் தலைமை ஆசிரியரை பழிவாங்கும் நோக்கத்தில் இத்தகைய செயலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon