தேர்வில் காப்பி அடித்ததாக கூறி ஆசிரியர் கண்டித்ததால் மாணவி தற்கொலை..!
சென்னை பல்லாவரம் அருகே ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரத்தில் ஒரு பகுதியை சேர்ந்த ஹரினி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் தேர்வில் காப்பி அடித்ததாக கூறி ஆசிரியர் மாணவியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





