ஹிஜாபை முறையாக அணியாத இளம்பெண் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு..!

ரானில் ஹிஜாபை முறையாக அணியாததாக கோரி இளம்பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன. ஈரானில் பெண்கள் தங்கள் ஹிஜாபை எரித்து போராட்டம் நடத்தினர்.

 

ஈரானில் குர்திஸ்தான் மாகாணத்தில் 22 வயது பெண் ஹிஜாபை முறையாக அணியவில்லை என்று கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த பெண் கோமா நிலைக்கு சென்று நினைவு திரும்பாமல் உயிரிழந்தார்.

 

இளம் பெண்ணின் மரணம் ஈரானில் பெரும் போராட்டமாக வெடித்துள்ளது .போராட்டத்தின் பொழுது பெண்கள் ஹிஜாப்பை எரித்து போராட்டத்தை நடத்தினர்.