ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த ஒரு பெண்..!

திருச்சி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த ஒரு பெண்ணை ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவர் தக்க சமயத்தில் காப்பாற்றினார். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு கொண்டிருந்தது.

 

அப்போது சுமார் 45 வயதுடைய ஒரு பெண்மணி தோழர்களுடன் அவசர அவசரமாக ஓடும் ரயிலில் ஏற முயன்ற அப்போது எதிர்பாராதவிதமாக அவரது பிடி நழுவி பிளாட்பாரத்தில் தண்டவாளத்திற்கு இடையே உள்ள இடைவெளியில் சிக்க இருந்தது.

 

அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்தோடி வந்து அந்த பெண்மணியை பிளாட்பாரத்திற்கு இழுத்து சென்று காப்பாற்றினார்.

 

இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. உயிரை பணயம் வைத்து ஓடும் ரயில் ஏற கூடாது என அந்த பெண்மணிக்கு அனைவரும் புத்திமதி கூறி அனுப்பி வைத்தனர்.